கேரளாவில் நிபா வைரஸ் என்ற தொற்று நோய் அதிகளவில் பரவி வருகிறது . இதன் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் முகக் கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு எல்லை பகுதியான கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மாவட்டத்திலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு நுழைய தடை விதிக்க வேண்டும் எனப் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவிலிருந்து பயணம் செய்து தமிழ்நாட்டுக்கு வருபவரை தீவிரமாக கண்காணித்து காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.