தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் (17.06.2023) அன்று சென்னை ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் நிதி நுட்ப நகரம் அமைப்பதற்கான நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர ‘இந்த நிதி நுட்ப நகரம்116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது. ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும், “உலகப் பொருளாதாரமே டிஜிட்டல் மயமாக காணப்படுகிறது,இந்த நிலையில் நிதி நுட்பத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி நிதி நுட்ப துறையில் சிறந்து விளங்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிதி நுட்ப நகரம் அமைவதால் ரூபாய்12,000 கோடி அளவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு ஈர்க்கப்படும். இதனால் சுமார் 80,000நபருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். நிதி நுட்ப நகரத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5. 6 கோடி சதுர அடியில் நிதி நுட்ப நகர கோபுரம் அடுக்கு மாடி கட்டிடமாக அமைக்கப்பட உள்ளது. இதில் பணி புரியும் நபர்களுக்கு குடியிருப்புகள் வசதிகள்,உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.மேலும் சென்னை தொடர்ந்து கோவை, திருச்சி ,மதுரை என்ற மாவட்டங்களில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.