டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 நாட்களும் நடைபெற உள்ளது. இந் நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ளாா்.
இந்தப் பட்ஜெட்டில் சமூக-பொருளாதாரம்,பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா, 90 ஆண்டுகள் பழைமையான வானூா்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா-2024 உள்பட 6 புதிய மசோதாக்கள் இக்கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதே நேரத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துக்கள் போன்றவைப் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.