தமிழகத்தில் தீபாவளி பண்டிகை (அக்டோபர் 31 )வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை அடுத்து வெள்ளி ,சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (அக்டோபர் 29 முதல் நாளை முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து , கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக சென்னை சென்ட்ரலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.