தமிழகத்தில் 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . மேலும் திருவள்ளூர் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மற்றும் கோவை மாவட்டம் மாசாணி அம்மன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் விரிவுபடுத்தி உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் காணொளி வாயிலாக இக்கோயில்களின் அன்னதானம் வழங்கும் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோயில்களுக்கு வரும் ஏழை, எளிய பக்தர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் 105 கோடி செலவிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் பாதுகாப்பு சான்றிதழ் (BHOG) வழங்கப்பட்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது .எனவே தமிழகத்தில் உள்ள 523 கோயில்களிலும் பாதுகாப்புடன் கூடிய அன்னதானம் வழங்கப்படுகிறது.