திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது !

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது !

 புரட்டாசிமாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளுக்குச் சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

சென்னையில் அமைந்துள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இரண்டாவது சனிக்கிழமை பக்தர்கள் பெருமாளை வழிபட்டு நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து பார்த்தசாரதிபெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பிறகு பக்தர்களுக்குப் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. பக்தர்கள் பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.

Related post