திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்ட விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா மே5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும் சனீஸ்வர பகவான் பலவித அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சியளித்தார். தொடர்ந்து மே 19ஆம் தேதி சனிஸ்வர பகவான் தேரோட்ட விழா நடைபெற்றதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் இக்கோயிலின் முன்பாக தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், செண்பக தியாகராஜர், நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.இந்த பிரமோற்சவ விழாவில் இன்று (20ஆம் தேதி) இரவு சனி பகவான் தங்க வாகனத்தில் வீதியுலாவும், நாளை மறுநாள் (21ஆம் தேதி) தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.