திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது . ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 2ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற உள்ளது. இக்கோவிலில் நவம்பர் 2-ஆம் தேதி அதிகாலை ஜெயந்திநாதப் பெருமான் எழுந்தருள்கிறார். தொடர்ந்து முருகனுக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் சண்முகவிலாசம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.நவ. 7-ஆம் தேதி மாலை கோயில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி, சூரனை வதம் செய்கிறார். 
இறுதியாக நவம்பர் 8-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவின் ஏழு நாட்களும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் காணப்படும்.இந் நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதால் அதற்கான கட்டண வசூல் அதிகரித்து வரும் நிலையில் அதை குறைப்பதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
