திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தை ( ஜனவரி 2.2024) இன்று பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். திருச்சி விமான நிலைய திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார. திருச்சி விமான நிலையம் ரூ.1100 கோடி செலவில் புதிய முனையமாகவும், ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகள் கையாளும் வகையில் திருச்சியில் மக்கள் பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது. மேலும் விழாவில் தமிழகத்தில் ரூபாய் 20, 140 கோடி மதிப்பீட்டில் 20 திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த விழாவின்போது தமிழக முதலமைச்சர் மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்றும் ,சென்னை -பினாங்கு, சென்னை- டோக்கியோ இடையேயான நேரடி விமான சேவையை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்..