தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 4)முதல் நடைபெறுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 2024 ஆம் ஆண்டிற்கான 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை சேர்ப்பதற்காகவும் ,திருத்தங்கள் மேற்கொள்வதற்காகவும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் இன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் நடத்தப்படுகிறது. இந்த வாக்காளர் சிறப்பு முகாம் டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, திருத்தங்களைச் செய்ய voter helpline app nvsp.in மற்றும் voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.