தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு. தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகச் சிறப்பாக  நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.தமிழ் மாதம் ஆடி பதினெட்டாம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கும் தொழிலோ,வாங்கும் பொருளோ 18 மடங்காக பெருகும் என்பது ஐதீகம். இந்நாளில் பெண்கள் தாங்கள் மாங்கல்ய கயிற்றை புதிதாக மாற்றி காவிரி அன்னையை வழிபடுவார்.

இந்த ஆடிப்பெருக்கு விழா தமிழ்நாட்டில் கருவூர், மயிலாடுதுறை, துலா கட்டம், சீர்காழி, திருவாரூர், கும்பகோணம், பக்வத் படித்துறை, பாலக்கரை, திருக்காட்டுப் பள்ளி மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை ஆகிய இடங்களில்,  போன்ற மாவட்டங்களில்  காவிரி நதி நீர் நிலைகளின் ஓரம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் புதுமண தம்பதியினர்கள்  அரிசி, பழங்கள் எனப்  படையலிட்டு மாங்கல்ய சிறப்பு பூஜைகளை  காவிரி அன்னைக்கு வழிபாடு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

Related post

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் ரயில்கள் இயக்கம் !

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் ரயில்கள் இயக்கம் !

தமிழ்நாட்டில் அனைத்து அம்மன் கோயில்களிலும் (ஆடி 18) நாளை ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து அம்மன் கோயில்களிலும் பெண்கள் விரதமிருந்து தனது…
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் சிறப்பு வழிபாடு இன்று நடைபெறுகிறது!

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் சிறப்பு வழிபாடு இன்று…

 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் தொம்பரம்பேடு கிராமத்தில் ஸ்ரீ மகா காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. தொம்பரம்பேடு ஸ்ரீ மகா காலபைரவர் கோயிலில் அஷ்டமி தேய்பிறை விழா ஒவ்வொரு மாதமும்…
ஈரோடு  மாவட்டம் அவல்பூந்துறை காலபைரவர் கோயில் தை அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை காலபைரவர் கோயில் தை அமாவாசை முன்னிட்டு பக்தர்கள்…

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ராட்டை சுற்றி பாளையத்தில் மிகப்பெரிய காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. சென்ற ஆண்டில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் சிறப்பு 39…