தமிழகத்தில்மீண்டும் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்! கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1 ஆம் தேதி பதிலாக 7 ஆம் தேதி ஒட்டுமொத்த பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. எனினும் சென்னை உட்பட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே காணப்படுகிறது . இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது குழந்தைகளுக்குத பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரின் உத்தரவின் படி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.6 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் கட்டாயமாக திறக்கப்படும் என அதிரடியாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.