தமிழகத்தில்கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு முகாம் . தமிழகத்தில் 100 இடங்களில் (ஜூன் 24 இன்று)மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுஅத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் மக்கள் நல வாழ்வு துறை சார்பாக தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா முகாம் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த மெகா சிறப்பு மருத்துவ முகாமில் சிறுநீரக பரிசோதனை ,இசிஜி பரிசோதனை, பெண்களுக்கு உண்டான மார்பக புற்றுநோய், ரத்த அழுத்த பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை ,எலும்பு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற பிரிவுகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் பொதுமக்களைப் பரிசோதித்து அதற்கு உண்டான ஆலோசனையை வழங்கி பின்னர் அவர்களுக்கு உண்டான மருந்து, மாத்திரைகள், சத்து சிறப்புகள் போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த மெகா சிறப்பு மருத்துவ முகாமிற்கு பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.