தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலைத்திற விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி , நாட்டுப்புற நடனம்,கவிதை ,எழுத்து பயிற்சி,பட்டிமன்றம் தேசிய பாடல்கள் என பலவித போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று பல வித திறமைகளை வெளிப்படுத்தினர் .
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் மேலும்தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.