தமிழகத்தில் உள்ள 219 மருந்தங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து. செய்யப்பட்டுள்ளது. தமிழக மருந்து கட்டுப்பாடு துறையினால் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன .
இதன் மூலம் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்யும் மருந்து விற்பனை கடைகளுக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது . மேலும் விதிகளை மீறி மருந்துகள் விற்பனை செய்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது . மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்றும்,விதிமீறல் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.