தமிழகத்தில் வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று உள்ளார். அதைத் தொடர்ந்தும் புதிதாக 4அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .சில அமைச்சர்களுக்குத் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிறு புனல் மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட கொள்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
தற்போது அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் குறித்தும் தொழில் கொள்கைகள் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்குதல் ,மதுவிலக்கு அமல்படுத்த உள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.