தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) வரும் 25-ஆம் தேதி சிறப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் படப்பிடிப்புகள் ரத்து.படப்பிடிப்பு நடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.
சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 25-ஆம் தேதி கமலா திரையரங்கில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கம், சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் சங்கம், சண்டை இயக்குநர்கள், கலைஞர்கள் சங்கம், நடன இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், செட்டிங் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய 5 சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்ககுமாறு தென்னிந்திய திரைப்பட சங்கம் கேட்டுக் கொண்டு ள்ளது.