சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். சென்னை துறைமுகம் மதுரவாயல் கிடையேயான பறக்கும் சாலை அமைக்கும் பணி வருகிற ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதனை தேசிய நெடுஞ்சாலை தேர்வு ஆணையத்தின் ஒப்பந்தத்தின் படி பணி தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து பெருமளவு பாதிப்படுவதால் துறைமுகத்திலிருந்து கனரக வாகனங்கள் சரக்கு போக்குவரத்துகள் செல்லும் வகையில் பறக்கும் சாலை திட்டத்தினை திமுக ஆட்சி மீண்டும் எடுத்துள்ளது. மதுரவாயில் இருந்து சென்னை துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் ரூபாய் 5 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் சிவானந்த சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் சிவானந்த சாலையில் தொடங்கி சிந்தாதிரிப்பேட்டை,எழும்பூர், நுங்கம்பாக்கம், மேத்தா நகர், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக அமைக்கப்பட உள்ளது. கீழ் அடுக்கு மேம்பாலத்தில் உள்ளூர் வாகனங்கள் அனுமதிக்கப்படும்., மேலடுக்கில் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் வகையில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையே அமைக்கப்படும் பறக்கும் சாலைக்கான மாதிரி படத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இத்திட்டம் வருகிற 2025 ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.