சிவகங்கை மாவட்டத்தில் ஸ்ரீ பிள்ளை வயல் காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் பூச்செரிதல் விழா 8 நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் ஜூலை 5ஆம் தேதி காலை 9:00 மணியளவில் கணபதி ஹோமத்துடன் வேதசாரிகள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் அம்மனுக்கு காப்பு கட்டியும் பூச்செரிதல் விழா தொடங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று பூச்செரிதல் விழாவில் காளியம்மனுக்கு500 பெண்கள் கூடைகளில் பூக்களைக் கொண்டு வந்து வணங்கினர். இவ் விழாவின் கடைசி நாளான வருகிற ஜூலை 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிள்ளை வயல் காளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில், கையில் குழந்தையுடன் எழுந்தருள்வார். இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.இந்த விழாவை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ பிள்ளை வயல் காளியம்மனைத் தரிசிக்க வருகை தருகின்றனர்.