சிறுவர்களை மையப்படுத்திய எறும்பு திரைப்படம் ஜூன் 16 இன்று வெளியீடு. சிறுவர்களை மையப்படுத்திய கதையாக எறும்பு திரைப்படம் இன்று (ஜூன் 16) வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் சார்லி ,சிறுமி மோனிகா, சிறுவன் சக்தி ரித்விக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. எறும்பு திரைப்படத்தை மன்ட்ரூ ஜிவி ப்ரோடேஷன் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. அருண் ராஜ் இசையமைத்துள்ளார். கே.எஸ் காளிதாஸ் ஒளிப்பதிவினை மேற்கொண்டு உள்ளார். விவசாயக் கூலியாக நடிகர் சார்லி நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். சிறுமி மோனிகா, சிறுவன் சத்தி ரித்விக் நடிப்பு காட்சிகள் நமது மனதினை உருக்க வைக்கின்றன.
சிறுவர்களை மையப்படுத்திய கதையாகவும், கிராமத்து மனிதர்களின் இயல்பான வாழ்க்கையைப் பற்றியும், தேசிய அளவில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் மையப்படுத்திய திரைப்படமாக உள்ளது.இந்தத் திரைப்படத்தில் கிராமத்து வாழ்க்கையின் அழகான காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மிக எளிமையான கதை கொண்ட ‘எறும்பு’ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.