கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 7000 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கான தகுதியானவர்கள் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு அறிக்கையில் ” கடந்த 2002 ஆம் ஆண்டுக்கு முன்னால் பிறந்தவர் 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிருக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் போன்றோர் இந்தக் கலைஞர் மகளிர் உரிமம் பெரும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் தனிப்பட்ட பெண்கள், கைம் பெண்கள், திருநங்கைகள் போன்றவர்கள் உள்ளடங்குவர். மேலும் இத்திட்டத்தில் தகுதியற்றவர்களாக அரசு வேலையில் பணிபுரியும் மகளிர்கள், ஓய்வூதியம் பெறும் மகளிர்கள், அரசிடம் இருந்து பென்ஷன் பெறும் குடும்பம், கார், ஜீப், டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்கள், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேலாக வருவாய் ஈட்டும் குடும்பங்கள்,கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தில் பயன்பெற முடியாது எனத் தமிழ்நாடு அரசு அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.