கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூபாய் 37 கோடி செலவிடப்படுகிறது. இந்தக் கண்ணாடி மேம்பாலத்தை அமைக்கும் பணி நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கான ஆய்வினைப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வா வேலு மேற்கொண்டார். விவேகானந்த சிலையும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையிலான கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும்,விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் வரும் என்று செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளார்.