நாம் அன்றாட உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் புற்று நோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக WHO அறிக்கை! உலக சுகாதார அமைப்பு புற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவு புற்று நோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில்”இந்த உடலுக்கு குளிர்ச்சி தரும் பல வகையான கற்றாழை சாறினால் புற்றுநோய் ஏற்படும். உணவு வகைகளில் தினசரி உட்கொள்ளும் ஊறுகாய் அதிகமாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்படும். அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிபூட்டிக் கொண்டு தயாரிக்கப்படும் குளிர்பானங்களால் புற்றுநோய் ஏற்படும். பிரபல குளிர்பானங்களில் கூட இந்த அஸ்பார்டேம் என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது.
சுமார் 6000 உணவு பொருட்களில் அஸ்பார்டேம் பொருள் பயன்படுத்தப்படுகிறது. கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் மொபைல்போன்கள் போன்ற மின்னணு பொருட்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளதாக WHO சுகாதாரத்துறை தகவல்களைத் தெரிவித்துள்ளது.