இந்தியாவின் இஸ்ரோ அமெரிக்காவின் நாசா இணைந்து புதிய செயற்கைக்கோள் ஒன்றினை விண்ணுக்குச் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு அதன் மூலம் பூமியின் கால வெப்பநிலை மாற்றங்கள், துருவப் பகுதிகள், கடலோரப் பகுதிகள் பற்றிய தகவல்கள், நிலநடுக்கம் , பேரிடர் போன்ற ஆபத்துகளில் இருந்து பூமியினைக் காப்பதற்காக தகவல் பரிமாற்றங்களைச்செய்ய (இஸ்ரோவும்- நாசா ) இணைந்து புதிய செயற்கை கோள் ஒன்றினை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.இந்தப்புதிய செயற்கைக்கோளுக்கு NASA-ISRO Synthetic Aperture Radar) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த புதிய செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தும் திட்டத்திற்காக ஜி எஸ் எல் வி விண்கலம் இந்தியாவின் உள்ள இஸ்ரோவில் தயாராகி வருகிறது.