இந்தியாவில் பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் பாரத் அரிசியினை மத்திய அரசு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக அரிசியின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது .இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர் .எனவே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மானிய விலையில் அரிசியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது .அதன்படி ஒரு கிலோ பாரத் அரிசி ரூபாய் 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்தப் பாரத் அரிசி மானிய விலை திட்டத்தினை மத்திய உணவு துறை அமைச்சர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் சில்லறை சந்தையில் மானிய விலையில் பாரத் அரிசியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து ஃப்ளிப்கார்ட் அமேசான் போன்றவைகளிலும் சி பாரத் அரிசி விற்பனை செய்யப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.