இந்தியாவில் முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களின் பிறந்தநாளை டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் சரண்சிங் 1979 ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்றார்.இவர் விவசாய தொழிலுக்காக கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்காக ஆதரவளித்தார் . விவசாய தொழில் வளர்ச்சிக்காக மேம்பாட்டுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். அவர் தனது பதிவியில் இருந்தபோது வேளாண்மை பொருள் சந்தை மசோதாவை கொண்டு வந்தார் .இவர் ஜமீன்தாரி ஒழிப்பு முறை எனும் சட்டத்தையும் கொண்டு வந்தார் .எனவே அவருடைய பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23ஆம் தேதி தேசிய விவசாய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் ,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயிகளுக்கான கருத்தரங்கங்கள், பயிற்சிகள் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லோருக்கும் உணவு கிடைப்பதற்காக விவசாயிகள் 24 மணி நேரமும் உழைக்க கூடியவர்களாகவே உள்ளார்கள் . இந்த நாளில் விவசாய தொழில் செய்பவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி அனைவருமே இணைந்து பாராட்டுவோம்!