இஸ்ரேலில் வலுவான போர் மிக பயங்கரமாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய் ‘எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது .இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேல் பணிபுரியும், சுற்றுலாக்காக சென்றிருக்கும் இந்தியர்கள் மத்திய அரசால் மீட்டபட்டு வருகிறன்றனர். இதன் மூலம் 212 இந்தியர்கள் புதுடெல்லியில் விமான மூலம் வந்தடைந்துள்ளனர். இவர்களை மத்திய அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் வரவேற்றார்.இவர்களில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
தற்போது தமிழ்நாட்டில் 7 பேர் அவர்களின் சொந்த ஊருக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இவர்களின் 14 பேர் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்தனர். இவர்களை சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியனும், திமுக கலா வீர சாமியும் வரவேற்றனர். மேலும் இஸ்ரோவில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.