இந்தியா முழுவதும் 24 ஆவது கார்கில் வெற்றி தினம் (ஜூலை 26) இன்று கொண்டாடப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. கார்கில் பகுதியை கைப்பற்ற போர் செய்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களைப் போரிட்டு இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் பகுதியை மீட்டனர். இந்த கார்கில்போரில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நாள் (ஜூலை 26) ஆண்டுதோறும் கார்கில் தினமாக கொண்டாடப்படுகிறது. கார்கில் நினைவிடத்தில் வீர மரணமடைந்த இந்திய வீரர்களுக்கு விமானங்கள் கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் லடாக்கில் முப்படை தலைமை தளபதிகளுடன் கார்கில் தினமான இன்று உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற கார்கில் நினைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் தமிழ்நாட்டை சேர்ந்த மாவீரன் மேஜர் சரவணனுக்கு வீர மரியாதை செலுத்தினார். மேலும் சென்னை ராஜாஜி சாலையில் கார்கில் போர் நினைவிடச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கார்கில் போர் வெற்றி தின நாளில் வீரமரணமடைந்த வீரர்களை தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தனது பதிவினைத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 24 ஆவது கார்கில் தின நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.