உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.சி.சி தரவரிசையில் முதல் இரண்டு இடத்தை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. எனவே இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டில் நேற்று (ஜூன் 7) இங்கிலாந்து மைதானத்தில் 3 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான இறுதிபோட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி. இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். எனவே முதல்வதாக ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் முதலில் மூன்று விக்கெட்டுகளில் வீழ்த்தப்பட்டனர். எனவே முதலில் இந்திய அணி வெற்றி பெறும் எனப் பார்க்கப்பட்ட நிலையில் அடுத்து வந்த டிராவிஸ் அதிரடியான ஆட்டத்தில் 146 ரன்களில் அடித்து அரை சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் மற்றும் ஸ்ட்வ் ஸ்மித் ஆட்டத்தினை சிறப்பாக விளையாடி களத்தில் இருந்தனர். 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணியில் களத்தில் உள்ளது. இந்த நிலையில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இரண்டாவது நாளாக இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் போட்டி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன் வெல்லப் போவது யார் என பெருமளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது!