இசைத்துறையில் சாதித்த பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்:பிரபல பாடகர் மனோவிற்கு அமெரிக்காவில் ரிச்மாண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டதினை வழங்கி உள்ளது. இசை புயலான பாடகர் மனோ தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். பிரபல பாடலாசிரியரான இவர் தெலுங்கு ,தமிழ் ,கன்னடம் ,மலையாளம் ,இந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி பெயர் பெற்றவர் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்திற்கு டப்பிங் செய்துள்ளார். உலகநாயகனான கமலுடன் இணைந்து சூப்பர் ஹிட்டான சிங்காரவேலன் படத்திலும் நடித்துள்ளார். இளையராஜா போன்ற இசைஞானிகள் இவரின் நடிப்புத்திறனையும் , பாடலின் திறனையும் கண்டு புகழாரம் செய்துள்ளனர்.
தற்போது சிவா நடிப்பில் வெளியான ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன்’ எனும் படத்தில் நடித்துள்ளார் .இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில்”அவரது பதிவில் 15 இந்திய மொழிகளில் 25,000 பாடல்களைப் பாடியதற்காகவும், 38 வருடங்களாக இந்திய இசை துறையில் சாதனை புரிந்ததற்காகவும், ரிசமாண்ட் கேப்ரியல் யூனிவர் சிட்டி எனக்கு டாக்டர் பட்டத்தினை வழங்கி உள்ளது. என்னை நேசித்த ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார். இதனைப் பாடகர் மனோ தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.