ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28% ஜிஎஸ்டி-மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. புதுடெல்லியில் 51ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் (2. 8. 2023) காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கவுன்சிலில் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி குறித்த கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 51 ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் இணைய வழியாக கலந்து கொண்டார். இந்த 51ஆவது கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ‘ ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28 % ஜிஎஸ்டி வரி விதிப்பு அக்டோபர் 1 முதல் அமலபடுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் இந்த வரி விதிப்பு குறித்து ஆறு மாதங்களுக்கு மறு ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். . மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தமிழக அரசின் தடை சட்டத்தை பாதிக்காத வகையில் 28 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.