ஆன்லைன் உணவு நிறுவனம் ஸ்விக்கி புதிதாக கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமாக ஸ்விக்கி நிறுவனம் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவினை டெலிவரி செய்யும் பணியினை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஸ்விக்கி நிறுவனமானது ஒவ்வொரு ஆர்டருக்கும் 2 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணமாக வசுலிக்கப்படும் எனக் கட்டாயமாகத் தெரிவித்துள்ளது. முதல்வதாக பெங்களூர் ஐதராபாத் பின்னர் மற்ற நகரங்களிலும் பிளாட்பார்ம் கட்டணத்தை வசூலிக்க நிர்ணயத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 15 லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டர்கள் கிடைக்கின்றன.
இதனால் குறைந்த தொகையான 2 ரூபாய் கூடுதல் கட்டணமாக இருந்தாலும் ஸ்விக்கி நிறுவனமானது அதிக வருவாயை ஈட்ட முடியும். ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உயர்வினாலும் இது போன்ற நிறுவனங்களின் முதலீட்டர்கள் தங்களின் முதலீட்டை குறைத்துக் கொண்டே வருகின்றனர். இதனால் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் நிதி நெருக்கடியும், தொழில் மந்தமாகும் காரணங்களால் புதிதாக பிளாட்பாரம் கட்டணத்தை அதிகரித்து வருகின்றனர். எனவே ஸ்விக்கி நிறுவனமானது ரெண்டு ரூபாய் பிளாட்பார்ம் கட்டணம் வாடிக்கையாளர்களிடையே கூடுதலாக வசூலிக்க உள்ளது.