கடந்த வருடம் ஜூலை 15ஆம் தேதி அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.இத்திட்டதினை விரிவுபடுத்தும் நோக்கமாக காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜூலை 15) இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் தமிழகத்தில் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம் பயிலும் 2.23 லட்சம் ஏழை , எளிய மாணவர்கள் பயனடைந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..இந் நிலையில் திருவள்ளுரில் கீழேரியில் நடை பெற்ற தொடக்க விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.