உத்திர பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வருகிற வருடம் 2024 இல் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு ராமர் கோயிலை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார் . இதைத்தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில் மூன்று அடுக்குகள் கொண்டதாக 1800 கோடி மதிப்பீட்டில் 57,400சதுர பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.தற்போது இந்தக் கோயில் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படவிருக்கிறது.இக்கோயில் திறக்கப்படும் நிலையில் ராமஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் பிரதமர் மோடியே கோயிலின் திறப்பு விழாவில் ராமர் சிலை நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனால் பிரதமர் மோடி”நான் ஆசீர்வாதமடைந்ததாக உணருகிறேன்! என் வாழ்வில் இது முக்கிய நிகழ்வாகும் என்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 4000 சாதுக்கள், 2500 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.