அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம். உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரத்தின் மந்த நிலை காரணமாக அமேசான் நிறுவனம் பல தொழில்நுட்ப செலவுகளை குறைக்கத் தொடங்கியுள்ளது. சமீப காலமாக அமேசான் நிறுவனம் 27,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அமேசான் நிறுவன ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு கவலையாக இருந்தனர்.இந்நிலையில் மே 1 முதல் 2000 ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அமேசான் நிறுவனம் கட்டாயப்படுத்தி வந்தது.
மேலும் அவர்கள் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் அமேசான் நிறுவனம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் எதிராக மே 31 சீயாலிட்டில் உள்ள தலைமை மையத்தில் Amazon’s spheres கட்டிடத்தின் முன்பு நின்று அமேசான் ஊழியர்கள் 1000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் அமர்த்தப்பட வேண்டும். என அமேசான் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.