நடிகர் சிம்பு ‘STR 48’ என்ற புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.நடிகர் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு , பத்து தல திரைப்படத்திற்குப் பிறகு புதியதாக ‘STR 48’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தினைத் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தினை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்காக நடிகர் சிம்பு அமெரிக்காவில் பல பயிற்சிகளை எடுத்து வருகிறார். மேலும் மிக நீளமான முடி கொண்டு குடிமி வைத்து ,புதுவித மிரட்டலான கெட்டபில் தயாராகி வருகிறார்.
இந்தப் புகைப்படத்தினைத் தேசிங்கு பெரியசாமி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் மிக விரைவில் தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் நடிகர் சிம்புவின் புகைப்படங்களை கண்டு சிம்பு ரசிகர்கள் ‘STR 48’ புதிய திரைப்படம் எப்போது வெளிவரும் என்று பெருமளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.