ரயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே துறை சார்பாக ஐ.ஆர்.சி .டி.சி இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மடிக்கணினிகள் மற்றும் செல்போன் App களின் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு ரயிலில் செய்யப்படுகின்றன . இதனால் டிக்கெட் வாங்குவதற்கான ரயில் பயணிகள் காத்திருப்பது தவிர்க்கப்படுகிறது.
தற்போது ஐ ஆர் சி டி சி இணையதளம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதிப்படுகின்றனர். ஐ ஆர் சி டி சி இணையம் மற்றும் செயலில் பணம் செலுத்துபவர்களில் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக முடங்கியுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறுகள் விரைந்து சரி செய்யப்படும் என ஐ ஆர் சி டி சி இணையதளம் தெரிவித்துள்ளது.