ஒரே வருடத்தில் சிஏ தேர்வுகளை மாணவர்கள் மூன்று முறை எழுதலாம் என ஐ சி ஏ ஐ கவுன்சிலிங் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இருந்த 2 முறை தேர்வு எழுதும் நடைமுறை மாற்றப்பட்டு இந்த ஆண்டு 2024 இல் ஜனவரி ,மே, ஜூன் மற்றும் செப்டம்பர்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இந்த ஆண்டிலிருந்து சி ஏ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த முறை CA தேர்வுகளின் மாணவர்களுக்குப் பயனளிப்பதாகவும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் தீரஜ் கண்டேல்வால் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சி ஏ பட்டய கணக்கியர் படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.