நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரில் சன் ரைஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே 25 ஆவது போட்டி ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ்க் வென்ற சன் ரைஸ் எய்டன் மார்க்ரம் பந்து வீச்சினை முதலில் தேர்வு செய்தார். எனவே முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் ஆடத் தொடங்கியது. இதில் ரோகித் சர்மா 28 ரன்னும், இஷான் கிஷான் 38 ரன்னும் எடுத்து ஆட்டத்தினை இழந்தனர். திலக் வர்மா ரன்கள் எடுத்து விக்கெட்டுக்குள்ளானார். கடைசியாக கேம்ரூன் க்ரீன் அதிரடியாக ஆடி 64 ரன்கள் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது.
அடுத்து ஆடிய சன் ரைஸ் ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ருக் 9 ரன்னும் ,மாயங்க் அகர்வால் 48 ரன்னும் ,ஹென்ரின் கிளாசன் 36 ரன்கள் எடுத்து ஆட்டத்தினை இழந்தார். சன் ரைஸ் ஹைதராபாத் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் எடுத்தது. இறுதி கட்டமாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்ட இறுதியில் புவனேஷ்வர் குமார் அடித்த பந்தை கேட்ச் பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார். எனவே மும்பை இந்தியன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற அர்ஜுன் டெண்டுல்கரின் விக்கெட்டே காரணமாக அமைந்தது.