ரூபாய் 148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்.டி.ஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து சிலையை முழுவதுமாக கண்டு களிக்க 15 பேர்கள் நிரம்பக் கூடிய 2 மின் தூக்கிகள்(லிஃப்ட்)அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நூலகம், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் ,அம்பேத்கரின் முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகள், அருங்காட்சியகங்கள், புகைப்பட தொகுப்புகள் , ஆடியோ காட்சி அறைகளும் இடம் பெற்றுள்ளன. அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தெலுங்கானா அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.