தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது இந்த விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன், ‘நிலவில் இருந்து பார்க்கும் போதும் தெரியும் வகையில், 100 ஏக்கர் பரப்பளவில் ‘தமிழ்’ என்ற வார்த்தை அமைப்பில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும்‘ என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் இந்த அறிவிப்பை தெரிவித்தார்.