சென்னை உயர்நீதி மன்றமானது ருத்ரன் திரைப்படத்தின் தடையை நீக்கியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் ,நடிகை பிரியாபவானி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப் படத்தினை கதிரேசன் இயக்கியுள்ளார். ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் படத்தில் ஹிந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைல் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்சா நிறுவனம் முதலில் பத்து கோடி ரூபாய் செலுத்தி இருந்தது. இன்னிலையில் 4 கோடியே ஐம்பது லட்சம் ஃபைல் ஸ்டார்,ரெவன்சா நிறுவனத்திடம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று கூறி திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால் ருத்ரன் படத்தில் தடை விதிக்கப்பட்டது.