2500 குழந்தைகளுக்கு இன்சுலின் வழங்கும் திட்டம் துவக்கம்!

2500 குழந்தைகளுக்கு இன்சுலின் வழங்கும் திட்டம் துவக்கம்!

 தமிழகத்தில்’ நீரிழிவால் பாதிக்கப்பட்ட 2,500 குழந்தைகளுக்கு, ‘இன்சுலின்’வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டைப் ஒன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் துவக்கப்பட்டு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. வீடுகளைத் தேடி மருத்துவ திட்டத்தினால் தமிழ்நாட்டில் 49.46 லட்சம் சர்க்கரை நோயாளிகள், 44.46 லட்சம் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் என, 94.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்று தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post