கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான்இசை அமைக்க உள்ளார். கதாநாயகியாக நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று கோயம்புத்தூரிலுள்ள பொள்ளாச்சி – மாசாணி அம்மன் கோவிலில் பல்வேறு துறை பிரபலங்களுடன் நடைபெற்றது.
இதில் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் ஆர். ஜே. பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் தொடர்ந்து படப்பிடிப்பு 35 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந் நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் படப்பினை வரவேற்கின்றனர்.