தமிழ்நாட்டில் பெங்கால் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! தமிழ்நாட்டில் பெங்கால் புயலால் 28 ,29ஆம் தேதி களில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் புதுச்சேரி ,காரைக்கால் ,திருவாரூர், நாகை, போன்ற மாவட்டங்களில் அதிகமான கன மழை பெய்யக் கூடும்.
தொடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கடலுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையிலிருந்து மக்களைப் பாதுகாக்க மீட்பு பணித்துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.