தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இவர் 30-ஆவது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். முன்னதாக அர்ச்சனா பட்நாயக் கோவை ,நீலகிரி மாவட்டங்களுக்குக் கலெக்டராக பதவி வகித்தவர்.அர்ச்சனா பட்நாயக் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்,தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக செயலாளராக பதவி வகித்தவர்.
கோவை மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்தபோது சாலையோர குழந்தைகளுக்கு
கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தவர். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எடுத்து நடத்தும் வாய்ப்புஅர்ச்சனா பட் நாயக் இவருக்கு கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார்.