டானா புயலால் தமிழ்நாட்டுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது!வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவான புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு டானா புயல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கப் பகுதிகளில் டானா புயல் காரணமாக அக்டோபர் 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். தொடர்ந்து மேற்குவங்கம், ஒடிசா பகுதியில் கடற்கரையையொட்டி ‘டானா’ புயல் கரையை கடக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதைத்தொடர்ந்து ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இருக்காது!ஆனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் டானா புயல் காரணமாக நாடு முழுவதும 29 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனஎனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.