திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜூடி மெயில்ஸ், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், வயது 15 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நூடுல்ஸ் பிரியரான இவர் நேற்று வழக்கம் போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார். சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு தூங்கிவிட்டார். இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட போது, சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து திருச்சியில் நூடுல்ஸ் கிடங்குகளில் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.