சென்னை அரும்பாக்கம் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கொண்டாட்டம்!

சென்னை அரும்பாக்கம் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கொண்டாட்டம்!

சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் பகுதியில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொருவருடமும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் .அந்த வகையில் இந்த வருடம் 2024 கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆலயத்தில் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிளக்கு பூஜையுடன் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 26 ஆம் தேதி திங்கட்கிழமை கோயில்களில் சம்பந்தி அன்னதானம் வழங்கப்பட்டு , மாலை 6.00மணியளவில் கோபாலகிருஷ்ணர் அலங்காரம் மற்றும் ஆண்டாள் அலங்காரம் அபிஷேகங்கள் , பூஜைகளும் நடைபெற்றது. பிறகு குழந்தைகளுக்கான ரங்கராட்டினம் விளையாட்டு வகைகள் வைக்கப்பட்டு அவர்களுக்குப் பிடித்தமான தின்பண்டங்கள் வழங்கப்பட்டன.

 இங்கு வைக்கப்பட்டிருந்த விளையாட்டுத் திடல்களில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினர். அதன் பிறகு இரவு 8.00 மணியளவில் கிருஷ்ணர் திருவீதி உலா தொடங்கப்பட்டு இரவு 2 மணி வரை நடைபெற்றது. 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வனபோஜனம் நிகழ்ச்சியும், அதன் பிறகு ஸ்ரீ வெங்கடகிருஷ்ணன் பல்லக்கு சேவையும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. இந்த மூன்று நாட்களுமே அண்ணாநகர் பகுதியின் வளைவுக்கு எதிரில் ரசாக் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைகளுடன், பக்தர்களும் மகிழ்ச்சியுடன் சாமியைத் தரிசித்து கொண்டாடினர்

Related post

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு !

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு !

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு.        தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (6.9.2023) விடுமுறையைத் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2023 (செப்டம்பர்…