புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகஸ்ட் 16 விண்ணில் ஏவப்படும்!

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகஸ்ட் 16 விண்ணில் ஏவப்படும்!

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இ ஓ எஸ் 8 ஆகஸ்ட் 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் நிலையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் ஆகஸ்ட் 16ஆம் தேதி எஸ் எஸ் எல் வி -டி 3 ராக்கெட்டின் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (இ ஓ எஸ்- 8 )விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எரிமலை கண்காணிப்பு, தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு இந்தச் செயற்கைகோள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தச் செயற்கை கோள் புவியில் இருந்து 475 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் சுதந்திர தினத்திற்கு மறுநாளான ஆகஸ்ட் 16ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டு இந்தியாவின் சாதனை நிகழ்த்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related post